Monday, 4 April 2011

யானை முகத்தான்



The above ceramic mural was made in 1996 in association with my mentor Shri. Thangavelu and this was exclusively done for Shri. L.V. Prasad, Adayar, Chennai. While seeing this Elephant, I think of Lord Vinayaka and the following story:


விநாயகருக்கும் யானை முகம் வந்தது எப்படி?. இதற்கான புராண கதை உண்டு.

பார்வதி தேவி பூஜை ஒன்றில் ஈடுபட்டிருந்தார். அந்த பூஜை முடியும் வரை அவர் எழுந்திருக்கக்கூடாது. அந்த பூஜையின் போது யாருடைய தலையீடும்இருக்கக்கூடாது என்பதற்காக அவர் விநாயகரை படைத்தார்.

யார் வந்தாலும் உள்ளே விட வேண்டாம் என்று விநாயகரிடம் கூறி விட்டு பூஜையில் அமர்ந்தார் பார்வதி.

பார்வதியின் ஆணைப்படி காவற் பணியில் ஈடுபட்டார் பாலகனான விநாயகர்.

பார்வதி தேவியைக் காண பிரம்மா வந்தார். விநாயகர் உள்ளே விட மறுத்துவிட்டார்.

யாரும் பார்வதி தேவியை பார்க்க முடியாது என்று கூறி பிரம்மாவுககு அனுமதி மறுத்தார்.

பிரம்மன் கம்பீரமாக நான் படைப்புக் கடவுள் பிரம்மா என்றார். என்னை படைத்தவர்பார்வதி. அவர் கட்டளைபடிதான் நான் செயல்படுவேன். யாரையும் உள்ளேஅனுமதிக்க கூடாது என்பது அவர் ஆணை என்று கூறி பிரம்மனை பார்வதி தேவியைபார்க்க அனுமதிக்க முடியாது என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டார்.

தேவர்கள், முனிவர்கள் எல்லாருக்கும் இதே பதில்தான். அனைவரும்சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமான் வந்தார். அவருக்கும்அனுமதி மறுத்தார் விநாயகர்.

கோபம் பொங்கியது சிவபெருமானுக்கு, விநாயகருடன் போரிடத் துவங்கினார்.முடிவில் விநாயகரின் தலையை துண்டித்தார்.

இந்நிலையில் பூஜை முடிந்து வெளியே வந்த பார்வதி நடந்ததை உணர்ந்தார்.சிவபெருமானிடம் தான் விநாயகரை படைத்ததையும், தான் இட்ட கட்டளையையும்கூறினார்.

உண்மைமைய உணர்ந்த சிவபெருமான் தேவர்களுக்கு ஒரு கட்டளையிட்டார்.உலகெங்கும் சென்று தேடுங்கள். யார் வடக்கு பக்கம் தலை வைத்துபடுத்திருக்கிறார்களோ அவர் தலையை வெட்டி எடுத்து வந்து விநாயகருக்குபொருத்துங்கள் என்றார்.

தேவர்கள் தேடிக் கொண்டு சென்ற போது. யானை ஒன்றுதான் வடக்கே தலை வைத்துப்படுத்திருந்தது. அதன் தலையை வெட்டி விநாயகருக்கு பொருத்தினர். இதுதான்விநாயகருக்கு யானை முகம் வந்த கதை..


No comments:

Post a Comment